திங்கள், 29 நவம்பர், 2010

srikaruppan12@gmail.com

இவர்கள் ஏன் நமக்கு ஆசான்கள்?

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் ஆஸ்தான குருக்களாக பாரதி,பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகயோர் விளங்குகிறார்கள்.மாகவி
பாரதி ஆங்கில ஏகாதிபத்திய ஆதிக்க காலத்தில் தனது பேனா ஆயுதம் மூலம் வீறுகொண்ட
கவிதைகளை படைத்து மக்கள் மத்தியில் வீராவேசத்தை விதைத்தவன்.சமூக சீர்திருத்த விதைகளையும் விதைத்தவன். உலகளாவிய ஞானம் கொண்டு சோசலிசத்தை சோவியத்தை
அதன் புரட்சியை பாராட்டி மகிழ்ந்தவன்.

ஞாயிறு, 21 நவம்பர், 2010

சமூக மாற்றத்தில் தலித் இலக்கியத்தின் தாக்கம்

பாரதி தனது கதைகளில், நாவல்களில் முத்தாய்ப்பான நாவல் சந்திரிகையின் கதையும்
ஆறில் ஒரு பங்கு கதையும் குறிப்பிடத்தகுந்தவை.இவற்றில் அன்றே ஆன்மசுத்தியோடு
அவர் சிந்தித்து செயல்பட்ட காரியங்களான ஒன்று

படித்ததில் கவரந்தவை

பாரதியின் கதைகளில் 'ஆறில் ஒரு பங்கு' மனதை கவரக்கூடியது.

புதன், 10 நவம்பர், 2010

பரவட்டும் படைப்புகள் நிகழ்ச்சிகள்

பரவட்டும் படைப்புகள் நிகழ்ச்சிகள்

வளரந்துவரும் அறிவியல் யுகத்தில் படைப்புகளை அச்சு ,பேச்சு, தொலைக்காட்சி
ஆகியவற்றின்மூலம்தான் வெளியிட வேண்டியிதில்லை. பரவலாக நம் உறுப்பினர்கள்
உள்ளத்திலிருந்து ஓடிவரும் அருவிச்சிந்தனைகளை,வாசக நண்பர்களிடமிருந்து வரும்
கருத்துகளை பதிவுசெய்து திரட்டிவைத்து இன்னும் பலருக்கு பகிர்ந்து கொள்ளலாம்.
ஆரோக்கியமான விவாதம் மூலமாக த மு எ க ச செயல்பாட்டை கூர்மைப் படுத்தலாம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின்
வலைப்பதிவின் மூலம் த மு எ க ச குடும்பத்திற்குள்ளும் த மு எ க ச சொந்த பந்தங்கள் மத்தியில்
இருந்தும் படைப்புகள் நிகழ்ச்சிகளின் விபரங்கள் இந்தக் களத்தில் நிரம்பட்டும். கைவிரல்
பேனாக்களை எடுங்கள் இந்த வையம் முழுதும் சிந்தனை மூலம் சிறக்க!